புது தில்லியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (NCORD) 10வது உயர்மட்டக் கூட்டத்தில், போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்த தொலை நோக்கு ஆவணத்தை (2026-2029) மத்திய அரசு வெளியிட்டது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) ஏற்பாடு செய்திருந்த NCORD கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரால் இந்த ஆவணம் வெளியிடப்பட்டது.
இது கடத்தல் வலைப்பின்னல்களைக் கண்டறிதல், விநியோகச் சங்கிலிகளை சீர் குலைத்தல் மற்றும் போதைப்பொருள் சூழலியல் அமைப்புகளை அழித்தல் ஆகிய மூன்று முனை உத்தியை வழங்குகிறது.
பல நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் நிதி ரீதியிலான சீர்குலைவு மூலம் முக்கிய போதைப்பொருள் கடத்தல் குழுக்களை செயலிழக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக 40-க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் நிறுவனங்களை இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது.
போதை மருந்துகள் மற்றும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் மீதான சட்டவிரோத கடத்தல் தடுப்பு சட்டம், 1988 இன் (PITNDPS Act, 1988) கீழான அமலாக்க நடவடிக்கைகளை இது வலுப்படுத்துகிறது.