TNPSC Thervupettagam

தேசிய மகளிர் தினம் 2026 - பிப்ரவரி 13

February 16 , 2026 2 days 83 0
  • இந்த நாள் சரோஜினி நாயுடுவின் பிறந்த நாளை நினைவு கூரும் நாள் ஆகும்.
  • 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த சரோஜினி நாயுடு ஒரு கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார்.
  • 1925 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் (INC) முதல் இந்தியப் பெண் தலைவர் ஆனார்.
  • பின்னர் 1947 ஆம் ஆண்டு ஐக்கிய மாகாணங்களின் (தற்போதைய உத்தரப் பிரதேசம்) முதல் பெண் ஆளுநரானார்.
  • தனது தேச பக்தி மிக்க கவிதைக்காக அவர் "இந்தியாவின் நைட்டிங்கேல்" என்று அறியப் பட்டார்.
  • இந்த நாள் சமூகத்தில் பெண்களின் அதிகாரமளித்தல், பாலினச் சமத்துவம், கல்வி மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்