மத்திய அரசானது இந்திய மருத்துவக் கழகத்தை கலைத்து விட்டு அதே நேரத்தில் 4 இதர தன்னாட்சி வாரியங்களுடன் சேர்த்து தேசிய மருத்துவ ஆணையத்தை (NMC - National Medical Commission) அமைத்துள்ளது.
அந்த 4 தன்னாட்சி வாரியங்கள் பின்வருமாறு:
இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம்
முதுகலை மருத்துவக் கல்வி வாரியம்
மருத்துவ ஆய்வு மற்றும் தர நிர்ணய ஆணையம்
அறவியல் மற்றும் மருத்துவப் பதிவுகள் வாரியம்
இந்த வாரியங்கள் NMC அமைப்பின் தினசரி செயல்பாடுகளில் உதவுவதற்காக வேண்டி அமைக்கப் படுகின்றது.
NMC சட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
NMC ஆனது 1 தலைவர், 10 பதவி வழி உறுப்பினர்கள் மற்றும் 22 பகுதி நேர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
சுரேஷ் சந்திர சர்மா அவர்கள் இதன் முதலாவது தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பணியாற்றவுள்ளார்.