இந்திய மருந்தியல் கண்காணிப்பு ஆணையம் (IPC) ஆனது 5வது தேசிய மருந்தியல் கண்காணிப்பு வாரத்தை (NPW) துவக்கியது.
NPW ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 23 ஆம் தேதி வரை அனுசரிக்கப் படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்த வார அளவிலான அனுசரிப்பின் கருத்துரு, "Your Safety, just a Click Away: Report to PvPI" என்பதாகும்.
இந்த ஒரு வார காலப் பிரச்சாரம் ஆனது சுகாதார வல்லுநர்கள், ஒழுங்கு முறை அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.