தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO) ஆனது 78வது பல்குறிகாட்டிகள் சார்ந்த கணக்கெடுப்பு (MIS) என்ற சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
கேரளா, மணிப்பூர், நாகாலாந்து மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் குடிநீருக்கான மேம்பட்ட வளங்களுக்கான அணுகல் 90%க்கும் குறைவாக உள்ளது.
முக்கிய மாநிலங்களில், அசாம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ஒடிசா ஆகியவை கிராமப் புற மற்றும் நகர்ப்புற வீடுகளுக்கான குழாய்வழிக் குடிநீர் வசதி வழங்கீட்டில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
முக்கிய மாநிலங்களில் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகியவற்றில் பிரத்தியேக கழிப்பறை வசதி கொண்ட கிராமப்புற வீடுகள் மிகக் குறைந்த அளவு விகிதத்திலேயே உள்ளன.
சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம், நாகாலாந்து மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில், விறகுகளே சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் மூலமாக உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்துடன் சேர்த்து இந்த மாநிலங்களில், 25 சதவீதத்திற்கும் குறைவான குடும்பங்களே சமையலுக்கு LPG எரிபொருளினைப் பயன்படுத்துகின்றன.
இந்தக் கணக்கெடுப்பின் போது, 15 முதல் 24 வயதுடைய 16.1% ஆண்களும், 43.8% பெண்களும் படிக்கவில்லை, வேலை வாய்ப்பு பெறவில்லை அல்லது எந்தவித ஒரு பயிற்சியும் பெற்று இருக்க வில்லை.
18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே கைபேசிகளுக்கான பிரத்தியேக அணுகலைப் பெற்றுள்ளனர்.
பெரிய மாநிலங்களில், உத்தரகாண்ட், ஒடிசா, கேரளா மற்றும் டெல்லி ஆகியவற்றில் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி ஆகியவை பெறாத 15 முதல் 24 வயதுடைய ஆண்கள் அதிக விகிதத்தில் (20%க்கும் அதிகமானோர்) உள்ளனர்.
உத்தரப் பிரதேசம், அசாம், ஒடிசா, குஜராத், மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி ஆகியவை பெறாத பெண்களின் விகிதம் அதிகமாக உள்ளது.