TNPSC Thervupettagam

தேசிய மின்சாரக் கொள்கை வரைவு 2026

January 26 , 2026 14 hrs 0 min 25 0
  • மின்சார அமைச்சகம் ஆனது, 2026 ஆம் ஆண்டு தேசிய மின்சாரக் கொள்கை (NEP) வரைவைப் பொதுமக்களின் ஆலோசனைக்காக வெளியிட்டது.
  • இந்தக் கொள்கை NEP 2005 கொள்கைக்கு மாற்றாக அமைகிறது மற்றும் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மின் உற்பத்தித் துறையை மாற்றுவதற்கான ஒரு செயல் திட்டத்தினை அமைக்கிறது.
  • இந்தியா 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பொதுவான வீட்டு மின் வசதி வழங்கலை அடைந்தது மற்றும் 2013 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தேசிய மின் கட்டமைப்பை இயக்கி வருகிறது.
  • தனிநபர் மின்சார நுகர்வை 2030 ஆம் ஆண்டுக்குள் 2,000 kWh ஆகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் 4,000 kWh ஆகவும் உயர்த்துவது இதன் இலக்குகளில் அடங்கும்.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 2005 ஆம் ஆண்டு நிலைகளிலிருந்து 45% குறைத்து 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழியப் பசுமை இல்ல வாயு உமிழ்வை அடைவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரித்தல், மின் கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை ஊக்குவித்தல், மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்புகளைக் குறைத்தல் மற்றும் மின் கட்டமைப்பை நவீனமயமாக்குதல் ஆகியவை முக்கியச் சீர்திருத்தங்கள் ஆகும்.
  • சேமிப்பு அடிப்படையிலான நீர் மற்றும் அனல்மின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவதுடன், அணுசக்தி திறன் உருவாக்கத்திற்கான இலக்கு 2047 ஆம் ஆண்டுக்குள் 100 GW ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்