தேசிய மின் ஆளுமை சேவை வழங்கல் மதிப்பீடு 2021
June 18 , 2022
1113 days
780
- 2021 ஆம் ஆண்டின் தேசிய மின் ஆளுமை சேவை வழங்கல் மதிப்பீடு (NeSDA) என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- இந்த அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் முதல் முறையாக மதிப்பிடப்பட்டது.
- மேலும் ஒன்றியப் பிரதேசங்களில் இது முதலாவது இடத்தில் உள்ளது.
- இது தேசிய மின்-ஆளுமை சேவை வழங்கல் மதிப்பீட்டில் ஒட்டு மொத்தமாக 90 சதவிகித இணக்கத்தைக் கொண்டுள்ளது.
- ஒட்டு மொத்தமாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் மத்தியில் கேரளா அதிக அளவிலான இணக்கத்தைக் கொண்டுள்ளது.
- மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகியவை ஒட்டு மொத்தமாக இணக்கத்துடன் 90 சதவீதத்திற்கும் மேலான மதிப்புடன் சேவை தளத்தில் முதலிடத்தில் உள்ளன.
- வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களுக்கான சேவைகள் இணைய தளங்களில், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவை முதல் இடங்களைப் பெற்றுள்ளன.
- சேவைகள் இணைய தளங்களுக்கான அளவுருக்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான இணக்கத்துடன் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகியவை முன்னணி மாநிலங்களாக உள்ளன.

Post Views:
780