இந்திய மீன்வளத் துறையில் பேராசிரியர் டாக்டர் ஹிராலால் சௌத்ரி மற்றும் அவரது சக டாக்டர் K.H. அலிகுன்ஹி ஆகியோரின் பங்களிப்பைக் கௌரவிப்பதற்காகவும் நினைவு கூருவதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
1957 ஆம் ஆண்டில் ஹைப்போபிசேஷன் எனப்படும் தூண்டுமுறை இனப்பெருக்க நுட்பத்தின் மூலம் இந்தியப் பெருங்கெண்டை மீன்களில் தூண்டப்பட்ட இனப் பெருக்கம் மற்றும் இனப்பெருக்க நடவடிக்கைகளை அவர்கள் வழி நடத்தினர்.
இது இறுதியில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஒரு புரட்சிக்கு வழி வகுத்தது.
2013-14 ஆம் நிதியாண்டில் 95.79 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் மீன் உற்பத்தி ஆனது 2024-25 ஆம் நிதியாண்டில் சாதனை அளவாக 195 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.