தேசிய மீன் வளர்ப்போர் விழிப்புணர்வு தினம் 2026 – ஜூலை 10
July 15 , 2026 13 days 200 0
இந்த நாள் மீன் வளர்ப்போரை கௌரவிப்பதையும், நீடித்த நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒடிசாவின் அங்குல் பகுதியில் 1957 ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று பேராசிரியர் டாக்டர் ஹிராலால் சௌத்ரி மற்றும் டாக்டர் அலிகுன்ஹி ஆகியோரால் இந்திய பெருங்கெண்டை மீன்களின் முதல் வெற்றிகரமான தூண்டப்பட்ட இனப்பெருக்கம் செய்யப்பட்டதை இந்த நாள் நினைவுகூர்கிறது.
இது தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் (NFDB) நிறுவன தினத்தையும் குறிக்கிறது.
இந்தியாவின் மீன்வளத் துறை மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கு மீன் வளர்ப்போர், மீனவர்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்முனைவோர் ஆற்றியப் பெரும் பங்களிப்பை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
2024–25 ஆம் ஆண்டில், இந்தியாவின் மீன் உற்பத்தி 197.75 லட்சம் டன்னாக இருந்தது, கடல் உணவு ஏற்றுமதி ₹60,500 கோடியைத் தாண்டியது என்பதோடு மேலும் கடந்த தசாப்தத்தில் இறால் உற்பத்தி 270% என்பதாக அதிகரித்துள்ளது.