தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது, பல விளையாட்டுப் போட்டிகளைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவித்துள்ளது.
இது விளையாட்டுப் போட்டிகள் ஒளிபரப்பு சமிஞ்கைகள் (பிரசார் பாரதி ஊடகத்திடம் கட்டாயமாகப் பகிர்தல்) என்ற சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்பை இந்த அறிவிப்பு புதுப்பித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு அறிவிப்பானது, அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுகள், காமன் வெல்த் விளையாட்டுகள் மற்றும் ஆசிய விளையாட்டுகள் ஆகியவற்றைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளாக அறிவித்துள்ளது.