இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்துடன் (National Investment and Infrastructure Fund-NIIF) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
NIIF ஆனது முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான நிதி மேலாண்மை அமைப்பாகும்.
இது 40000 கோடி ரூபாய் திட்டமிடப்பட்ட தொகுப்புடன் 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது.
நாட்டின் உள்கட்டமைப்புத் துறைக்கு நீண்டகால மூலதனத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதன் 49% பங்குகள் இந்திய அரசிடம் உள்ளது. மீதமுள்ள 51% பங்குகள் வெளிநாட்டுக் குழுமங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் உள்ளது.