காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வன ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
அவர்களின் துணிச்சலை அங்கீகரித்து, வளங்காப்பிற்கான உறுதிப்பாட்டை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தேதியானது 1730 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிஷ்னோய் படுகொலையுடன் தொடர்புடையது.
அமிர்தா தேவி மற்றும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த 362 பேர், மரங்கள் வெட்டப் படுவதைத் தடுக்க ஒரு கெஜ்ரி மரத்தைக் கட்டிப் பிடித்து தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.
பிஷ்னோய் சமூகத்தினர் பெரும்பாலும் தெற்கு இராஜஸ்தானில் வாழ்கின்றனர்.
இந்தச் சமூகம் ஆனது 1485 ஆம் ஆண்டில் குரு மகாராஜ் ஜம்பாஜியால் நிறுவப்பட்டது.
அவர் தனது சீடர்கள் வாழ 29 விதிகளை வழங்கினார், அவற்றில் மிக முக்கியமானது பசுமையான மரங்களை வெட்டுவதற்கும் விலங்குகளைக் கொல்வதற்கும் எதிரான தடைகள் ஆகும்.
கெஜ்ரி (வன்னி மரம்) மரம் வறட்சியைத் தாங்குகின்ற மற்றும் மண்ணை வளப் படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Remembering Martyrs, Protecting Forests" என்பதாகும்.