வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அவற்றைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய வனவிலங்கு தினம் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டாடப் பட்டது, இது விலங்கு நடத்தை நிபுணரும் சமூக சேவகியுமான கொலின் பேஜ் என்பவரால் நிறுவப்பட்டது.
இது பிப்ரவரி 22 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை அனுசரிக்கப் படுகிறது; ஸ்டீவ் இர்வின் அவர்களை கௌரவிக்கும் வகையில் செப்டம்பர் 4 சேர்க்கப்பட்டது.
பருவநிலை மாற்றம், வாழ்விட அழிவு, வேட்டையாடுதல் மற்றும் வணிக ரீதியான சுரண்டல் போன்ற வனவிலங்குகளுக்கான அச்சுறுத்தல்களை இந்த தினம் எடுத்துக் காட்டுகிறது.
இது வனவிலங்குகள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.