தேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித் தொகைத் திட்டம்
February 25 , 2022 1267 days 644 0
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தினைத் தொடரச் செய்வதற்கு கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண்டு வருமான வரம்பை 1.5 லட்சம் ரூபாய் என்ற அளவிலிருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பது போன்ற தகுதி வரையறைகளில் குறைந்தபட்ச மாற்றங்களுடன் இந்தத் திட்டத்தினை 2025 -26 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி, 8 ஆம் வகுப்பிலேயே அவர்கள் பள்ளிப் படிப்பினைக் கைவிடாமல் அவர்களின் படிப்பைத் தொடரச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், ஆண்டிற்கு தலா ரூ.12,000 உதவித் தொகையானது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.
2008-09 ஆம் ஆண்டில் அரசு இத்திட்டத்தினைத் தொடங்கியது.