பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் தேசிய வாகனக் கழிவுக் கொள்கையினை (National Vehicle Scrappage Policy) வெளியிட்டார்.
இக்கொள்கையானது ‘தன்னார்வ வாகனத் தொடர் நவீனமயமாக்கல் திட்டம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இக்கொள்கையானது இந்திய வாகனங்களை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் சாலைகளில் இயங்கத் தகுதியற்ற வாகனங்களைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் அறிவியல் ரீதியிலும் அகற்றுவதற்கும் வேண்டி இக்கொள்கை வழிவகை செய்கிறது.
இக்கொள்கையானது மாசற்ற, நெரிசல் இல்லாத மற்றும் வசதியான போக்குவரத்தினை அடைதல் என்ற 21 ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவின் ஒரு குறிக்கோளுடன் ஒத்துப் போகிறது.
இக்கொள்கையின்படி, வாகனங்கள் இறுதியாக அகற்றப் படுவதற்கு முன்பு, அங்கீகரிக்கப் பட்ட மற்றும் தானியங்கு மையங்கள் மூலம் அறிவியல் ரீதியாக சோதிக்கப் படும்.