இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலப் பயணத் திட்டத்தை இந்த தினம் நினைவு கூருகிறது
அந்தத் திட்டம் 2023 ஆம் ஆண்டில் சந்திரனின் தென் துருவப் பகுதியில் விக்ரம் தரையுறங்கு கலத்தை வெற்றிகரமாக மெதுவாகத் தரையிறக்கியது.
2023 ஆம் ஆண்டில், நிலவில் வெற்றிகரமாக மெதுவாகத் தரையிறங்கிய நான்காவது நாடாகவும், சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா ஆனது.
இந்தச் சாதனையை கொண்டாடும் வகையிலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக இந்திய அரசு அறிவித்தது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Towards Viksit Bharat – Innovating, Collaborating and Aspiring Global Space Leadership என்பதாகும்.
இந்த நாள் ககன்யான் மற்றும் சந்திரயான்-4 உள்ளிட்ட இந்தியாவின் வரவிருக்கும் விண்வெளிப் பயணங்களையும் சிறப்பித்துக் காட்டுகிறது.