மக்களவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் தேசிய விளையாட்டுத் துறை நிர்வாக மசோதாவினை அவையில் தாக்கல் செய்தார்.
இது விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உள்ளிட்ட தேசிய விளையாட்டு அமைப்புகளை இலக்காக கொண்டது.
இது விளையாட்டுக் கூட்டமைப்புகளை நிர்வகிப்பதற்காகவும் விளையாட்டு வீரர் நலனை மேம்படுத்துவதற்காகவும் ஒரு வலுவான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கடுமையானப் பொறுப்புணர்வை உருவாக்குவதற்காக ஒரு தேசிய விளையாட்டு வாரியத்தினை (NSB - National Sports Board) அமைப்பதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
அனைத்து தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளும் (NSF - National Sports Federations) மத்திய அரசின் நிதியுதவியைப் பெறுவதற்காக தேசிய விளையாட்டு வாரியத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
தேசிய விளையாட்டு வாரியமானது ஒரு தலைவரைக் கொண்டிருக்கும்.
மேலும் மத்திய அரசானது "திறமை, நேர்மை மற்றும் தகுதி வாய்ந்த நபர்களுள் ஒருவரை" அதன் உறுப்பினர்களாக நியமிக்கிறது.
இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் "பொது நிர்வாகம், விளையாட்டு நிர்வாகம், விளையாட்டுச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம்" போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
தேர்வு மற்றும் தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்படும்.
அந்தத் தேர்வுக் குழுவானது அமைச்சரவை அல்லது கேபினட் செயலாளர் அல்லது விளையாட்டுச் செயலரை அதன் தலைவராக கொண்டு இருக்கும்.
இது ஒரு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவரையும் உறுப்பினராக உள்ளடக்கியது.
அச்சிறந்த விளையாட்டு வீரர் துரோணாச்சாரியார் அல்லது கேல் ரத்னா அல்லது அர்ஜுனா விருது பெற்றவராக இருப்பார்.
ஒரு தேசிய அமைப்பானது, நிர்வாகக் குழுவிற்கான தேர்தல்களை நடத்தத் தவறினால் அல்லது "தேர்தல் நடைமுறைகளில் பெரும் முறைகேடுகளை" செய்திருந்தால், அந்தத் தேசிய அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேசிய விளையாட்டு வாரியத்திற்கு இருக்கும்.
வருடாந்திரமாகத் தணிக்கை செய்யப்பட்டக் கணக்குகளை வெளியிடத் தவறினால் அக்கணக்குகளும் அல்லது அதில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பொது நிதியும் இனி நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயத்திற்கான முன்மொழிவு ஆகும்.
இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் மற்றும் கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு முதல் தேர்தல் வரையிலான சர்ச்சைகளையும் தீர்மானிக்கும்.
இது நிறுவப்பட்டால், அத்தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.
இந்த மசோதாவானது, நிர்வாகிகளுக்கான வயது வரம்பு விவகாரத்தில் சில சலுகை உரிமைகளை வழங்குகிறது.
சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளின் சட்டங்கள் மற்றும் துணை விதிகள் அனுமதித்தால், 70 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் இத்தேர்தலில் போட்டியிட அது அனுமதிக்கும்.
வயது வரம்பை 70 ஆகக் குறைத்த தேசிய விளையாட்டுக் குறியீட்டிலிருந்து இது ஒரு முக்கிய விலகலாகும்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு அமைப்புகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) வரம்பிற்குள் உட்படும்.
அரசு நிதியைச் சார்ந்து இல்லாததால், BCCI அமைப்பானது இதை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது.
2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பட்டியலில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப் பட்டதைத் தொடர்ந்து, தற்போது, ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக இருக்கும் BCCI, இம்மசோதா சட்டமாக மாறியவுடன் அதன் விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று இந்த அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அல்லது மாநிலத் தேர்தல் ஆணையம் அல்லது மாநிலங்களின் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அல்லது துணைத் தேர்தல் ஆணையர்கள் அடங்கிய ஒரு தேசிய விளையாட்டுத் தேர்தல் குழு நிறுவும் விதியையும் இந்த மசோதா கொண்டுள்ளது.