தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் பகுதியளவு நடைமுறைக்கு வந்துள்ளது.
இது அனைத்து சக்திவாய்ந்த தேசிய விளையாட்டு வாரியம் (NSB) மற்றும் விளையாட்டு தகராறுகளைக் கையாள்வதற்கான ஒரு தீர்ப்பாயத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அமைக்கும்.
பின்வருவனவற்றை உள்ளடக்கிய தேசிய விளையாட்டு அமைப்புகளின் ஸ்தாபனம் மற்றும் நிர்வாக கட்டமைப்போடு தொடர்புடைய விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளன:
தேசிய ஒலிம்பிக் குழு,
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய ஒலிம்பிக் குழு,
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் (NSF) மற்றும்
பிராந்திய விளையாட்டு கூட்டமைப்புகள்
NSB மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக நிறுவப்பட முன்மொழியப் பட்டு உள்ளது.
பொது நிர்வாகம், விளையாட்டு நிர்வாகம், விளையாட்டுச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் கொண்ட திறன், நேர்மை மற்றும் அந்தஸ்து கொண்ட நபர்களிடமிருந்து மத்திய அரசால் நியமிக்கப்படும் ஒரு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் NSB வாரியத்தில் நியமிக்கப் படுவர்.
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு (NSF) இணைப்பு அந்தஸ்து வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கவும், இச்சட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தவுடன் எந்தவொரு தவறுக்கும் தண்டனை விதிக்கவும் இது அதிகாரம் அளிக்கும்.
அரசு நிதியுதவிக்கு தகுதி பெற NSF கூட்டமைப்புகள் NSB இணைப்பு அந்தஸ்தினைப் பெறுவது கட்டாயமாகும்.
NSB வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வயது வரம்பு 65 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்பதோடுமேலும் அனைத்து உறுப்பினர்களும் வயது வரம்பிற்கு உட்பட்டு மீண்டும் ஒரு பதவிக் காலத்திற்கு மறுநியமனம் பெற தகுதியுடையவர்கள்.