TNPSC Thervupettagam

தேசிய HPV தடுப்பூசி பிரச்சாரம்

November 24 , 2026 4 days 69 0
  • 2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேசிய HPV தடுப்பூசிப் பிரச்சாரம் தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களுக்குள், 2026 ஆம் ஆண்டு நவம்பர் 21 வரை இந்தியா 1 கோடிக்கும் (10 மில்லியன்) அதிகமான HPV தடுப்பூசி டோஸ்களைச் செலுத்தியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், பெற்றோரின் சம்மதத்துடன் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச, தன்னார்வ, ஒற்றை டோஸ் தடுப்பூசியை வழங்குகிறது.
  • அதிக ஆபத்துள்ள மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) வகைகளின் தொடர்ச்சியான தொற்றால் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதை இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் தாங்கள் அடையாளம் கண்ட இலக்கு மக்கள் தொகையில் 100% சாதனையை எட்டியுள்ளன.
  • U-WIN (உலகளாவிய தடுப்பூசித் திட்டம் – WIN) டிஜிட்டல் தளம் பயனாளிகளைக் கண்காணித்தல், நிகழ்நேரக் கண்காணிப்பு, முன்பதிவு செய்தல் மற்றும் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்களை வழங்குதல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
  • உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT) மற்றும் உயிரித் தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி சபை (BIRAC) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்திய சீரம் நிறுவனத்தால் (Serum Institute of India) உருவாக்கப்பட்ட செர்வாவாக் (CERVAVAC), வகை 6, 11, 16 மற்றும் 18 ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இந்தியாவின் நான்கு இணைதிறன் கொண்ட (Quadrivalent) HPV தடுப்பூசியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்