January 14 , 2026
8 days
63
- மத்திய உள்துறை அமைச்சர் தேசிய IED தரவு மேலாண்மை அமைப்பை (NIDMS) தொடங்கி வைத்தார்.
- NIDMS என்பது மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் (IED) தரவை சேமித்து பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு தேசிய டிஜிட்டல் தளமாகும்.
- இது தேசியப் பாதுகாப்புப் படையின் (NSG) தேசிய வெடிகுண்டு தரவு மையத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
- இந்த அமைப்பானது, குண்டுவெடிப்புக்குப் பிந்தைய விசாரணைகள் மற்றும் தடயவியல் பகுப்பாய்விற்கு ஆதரவளிக்கும்.
- இது மாநிலக் காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) மற்றும் மத்திய நிறுவனங்களிடையே தரவுப் பகிர்வை செயல்படுத்தும்.
- NSG உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் செயல்படுகிறது.
Post Views:
63