TNPSC Thervupettagam

தேசிய PM சுவநிதி (PM SVANidhi) விருதுகள் - ஆந்திரப் பிரதேசம்

November 25 , 2026 13 hrs 0 min 10 0
  • புதுதில்லியில் நடைபெற்ற சுவநிதி சம்மான் விருதுகள் விழாவில், பிரதமரின் தெருவோர வியாபாரிகள் தற்சார்பு நிதி (PM SVANidhi) திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசம் ஏழு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.
  • இந்த விருதுகளில் மூன்று மாநில அளவிலான விருதுகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான (ULBs) நான்கு விருதுகளும் அடங்கும்.
  • சிறப்பு முகாம்களில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தையும், கடன் வழங்குவதில் இரண்டாம் இடத்தையும், ஒட்டுமொத்த செயல்பாட்டில் மூன்றாம் இடத்தையும் பிடித்து உள்ளது.
  • கடன் வழங்குவதில் கடப்பா மாநகராட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்தது; 'சுவநிதி சே சம்ரித்தி' (SVANidhi Se Samriddhi) பிரிவில் இராமச்சந்திரபுரம் நகராட்சி முதலிடத்தையும், அமலாபுரம் நகராட்சி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
  • டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் விஜயநகரம் மாநகராட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
  • பி.எம். சுவநிதி என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மத்தியத் துறைத் திட்டமாகும், இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) இதன் செயல்படுத்தும் கூட்டாளராக உள்ளது.
  • இது தெருவோர வியாபாரிகளுக்கு நடைமுறை மூலதனக் கடன்கள், சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கு ஆண்டுக்கு 7% வட்டி மானியம் மற்றும் தகுதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாதம் ₹50–₹100 கேஷ்பேக் ஆகியவற்றை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்