தேசிய PNG இயக்கம் 2.0 முன்னெடுப்பிற்காக GAIL இந்தியா லிமிடெட் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்துடன் (PNGRB) கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த முன்னெடுப்பு ஜனவரி 01 முதல் மார்ச் 31, 2026 ஆம் தேதி வரை #NonStopZindagi பிரச்சாரத்தின் கீழ் இயங்குகிறது.
இந்தியா முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
வீடுகள், வணிகங்கள் மற்றும் போக்குவரத்திற்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த எரிபொருளாக PNG மற்றும் CNG பயன்பாட்டை இது ஊக்குவிக்கிறது.
இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரிப்பதற்கும், நாடு முழுவதும் நகர எரிவாயு விநியோக (CGD) வலையமைப்பை வலுப்படுத்துவதற்குமான பரந்த இலக்குகளை இந்த இயக்கம் ஆதரிக்கிறது.
GAIL நிறுவனத்தின் பங்கேற்பு ஆனது, தொழில்துறை கூட்டாளர்களுடன் ஒரு இந்தியா முழுவதுமான பிரச்சாரத்தையும், எரிபொருள் ஏற்பினை அதிகரிப்பதற்கான வெளிப்புற நடவடிக்கைகளையும் சேர்க்கிறது.