TNPSC Thervupettagam

"தேச விரோத அமைப்பு" – சொல்லாக்கம்

April 12 , 2023 831 days 264 0
  • அரசாங்க கொள்கையை விமர்சிப்பதை "தேச விரோத அமைப்பு" என்று கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • மேலும், மலையாளச் செய்தி ஊடகமான மீடியாஒன் நிறுவனம் மீதான மத்திய அரசின் தடையையும் ரத்து செய்தது.
  • ஒரு ஆளும் வர்க்கத்தின் (ஒரு தேசத்தின்) சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை எதிர்க்கின்ற அல்லது விரோதமாக விளங்கும் தனிநபர் அல்லது அமைப்பு ஆனது, தேச விரோத அமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
  • 19(2)வது சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு அடிப்படையிலும், அரசாங்கக் கொள்கையின் மீதான ஒரு விமர்சனத்தினை ஒரு கற்பனை அடிப்படையில் அதன் எல்லைக்குள் கொண்டு வர முடியாது.
  • 19(2)வது சட்டப் பிரிவானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலன்களுக்காக சில நியாயமானக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்