இந்தியத் தேர்தல் ஆணையமானது (Election Commission of India - ECI) தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் (Model Code of Conduct - MCC) ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட விதிமுறைகளை வகுத்துள்ளது. இது தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் இறுதி தேர்தல் அறிக்கைகளை வெளியிட தடை விதித்துள்ளது.
ஒரே கட்டமாக மற்றும் பல கட்டமாக நடைபெறும் தேர்தல்களுக்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126-ல் குறிப்பிடப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட காலத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று ECI கூறியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126 ஆனது தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் எந்தவொரு தேர்தல் பிரச்சாரத்தையும் தடை செய்யக்கூடிய “தேர்தல் அமைதிக் காலத்தை” உள்ளடக்கியுள்ளது.