TNPSC Thervupettagam

தேர்தல் வாக்குறுதிகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

August 29 , 2022 1042 days 460 0
  • தேர்தல் வாக்குறுதிகள் மீதான 2013 ஆம் ஆண்டு தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
  • இது 2013 ஆம் ஆண்டில் எஸ். சுப்ரமணியம் பாலாஜி எதிர் தமிழ்நாடு அரசு என்ற வழக்கின் தீர்ப்பாகும்.
  • வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123வது பிரிவின் (ஊழல் நடைமுறைகள்) வரம்பிற்குள் வராது என்று உச்ச நீதிமன்றம் முன்பு கூறியது.
  • ஒரு தனிப்பட்ட வேட்பாளர் மட்டுமே ஒரு ஊழல் முறைகேட்டை மேற்கொள்ள முடியும் என்றும் அவரது கட்சி அவ்வாறு செய்ய முடியாது என்றும் இது கூறியுள்ளது.
  • இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வானது இந்தத் தீர்ப்பினை வழங்கியது.
  • தற்போது, ​​நீதிமன்றத்தின் முந்தைய நிலையை மறுபரிசீலனை செய்வதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வானது நியமிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்