TNPSC Thervupettagam

தொகுதி மறுசீரமைப்பு மசோதா, 2026 – முக்கிய அம்சங்கள்

April 19 , 2026 15 hrs 0 min 43 0
  • உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026, தொகுதிகளை மறு வரையறை செய்வதற்கான தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டுகிறது.
  • மத்திய அரசால் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்படுவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.
  • உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது முன்னாள் நீதிபதி இந்த ஆணையத்திற்குத் தலைமை தாங்குவார்.
  • தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) அல்லது தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப் படும் ஒரு தேர்தல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
  • ஒவ்வொரு மாநிலத்திற்கும் 5 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் என 10 இணை உறுப்பினர்கள் இதில் இருப்பார்கள்; இவர்கள் இந்த ஆணையத்திற்கு உதவுவார்கள், ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை இருக்காது.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான மக்களவை இடங்களின் ஒதுக்கீடு, மாநிலச் சட்டப்பேரவைகளின் மொத்த பலம், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தல் ஆகியவற்றை இந்த ஆணையம் முடிவு செய்யும்.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மற்றும் பெண்களுக்கான தனித் தொகுதிகளையும் இது அடையாளம் காணும்.
  • இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக, பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்காக வரைவு முன்மொழிவுகள் வெளியிடப்படும்.
  • இந்திய அரசிதழில் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆணையத்தின் உத்தரவுகள் சட்டப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெறும், மேலும் அவற்றை எந்த நீதிமன்றத்திலும் எதிர்த்து முறையீடு செய்ய முடியாது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் குறிப்பிடும் தேதியிலிருந்து இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரும்.
  • இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிறகு நடைபெறும் தேர்தல்களுக்கு இந்தப் புதிய தொகுதி எல்லைகள் பொருந்தும்.
  • இந்த ஆணையம் ஒரு உயர்மட்ட அமைப்பாகும், இதன் முடிவுகள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை மற்றும் இறுதியானவை.
  • இதன் உத்தரவுகள் மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் சமர்ப்பிக்கப் படும், ஆனால் அவர்களால் அதில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்