TNPSC Thervupettagam

தொகுதி மறுவரையறை மசோதா, 2026

April 17 , 2026 14 hrs 0 min 69 0
  • 2029 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக 2026 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை மசோதா முன்மொழியப் பட்டுள்ளது.
  • சமீபத்திய மக்கள் தொகை தரவுகளைப் பயன்படுத்தி மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு (2026 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது) தொகுதி மறுவரையறைக்கு விதிக்கப்பட்ட தடையை இது நீக்கும்.
  • இந்தச் செயல்முறை அரசியலமைப்பின் 82 மற்றும் 170 வது சரத்துகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தொகுதி மறுவரையறை ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ளும்.
  • ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரே மதிப்பு” என்ற அடிப்படையில் சமமான மக்கள் தொகை பிரதிநிதித்துவத்தை இந்த ஆணையம் உறுதி செய்யும்.
  • இதன் உத்தரவுகள் சட்டப்பூர்வமானவை மற்றும் எந்த நீதிமன்றத்திலும் இதனை எதிர்த்து முறையீடு செய்ய முடியாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்