TNPSC Thervupettagam

தொடக்கப் பள்ளிகளில் பூஜ்ஜிய இடைநிற்றல் - திரிபுரா

September 12 , 2026 7 hrs 0 min 48 0
  • கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+) தரவுகளின் படி, 2025-26 ஆம் கல்வியாண்டில் 1-5 வகுப்புகளில் திரிபுரா பூஜ்ஜிய சதவீத இடை நிற்றல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
  • திரிபுராவின் தொடக்கப் பள்ளி இடைநிற்றல் விகிதமானது 2013-14 ஆம் ஆண்டில் 2.21 சதவீதத்திலிருந்து 2025-26 ஆம் ஆண்டில் 0 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் இடைநிலை அளவிலான இடைநிற்றல் விகிதமும் 25.51 சதவீதத்திலிருந்து 10.40 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • நிபுண் (NIPUN) பாரத் திட்டம் மற்றும் சஹர்ஷா திரிபுரா உள்ளிட்ட முன்னெடுப்புகளுடன் இந்த முன்னேற்றத்தை அம்மாநிலம் இணைத்துள்ளது.
  • இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து 2,048 தொடக்கப் பள்ளிகளிலும் பால்வாடிப் பள்ளிகளை (பாலர் வகுப்புகள்) அறிமுகப்படுத்த திரிபுரா திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்