தொடர்ச் சங்கிலித் தொழில்நுட்பம் அடிப்படையில் விதை விநியோகம்
August 23 , 2022 1256 days 589 0
ஜார்க்கண்ட் மாநில அரசு மற்றும் உலகளாவியத் தொடர்ச் சங்கிலித் தொழில்நுட்ப நிறுவனமான செட்டில்மின்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து தொடர்ச் சங்கிலித் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு விதை விநியோகம் செய்யும் ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
விதைப் பரிமாற்றத் திட்டம் உட்பட பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் விவசாயிகள் பெறும் போலியான விதைகளை அகற்றுவதையும், விதிகளை மீறச் செய்வதைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.