தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியத்தின் தேசியப் பட்டியல்
April 22 , 2020 1932 days 722 0
மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகமானது தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியத்தின் தேசியப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இது இந்தியா தனது தொட்டுணர முடியாத பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை அங்கீகரிப்பதன் ஒரு முயற்சி ஆகும்.
இந்த முன்னெடுப்பானது மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வை – 2024 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தப் பட்டியலானது ஏற்கெனவே யுனெஸ்கோவின் மனித நேயத்தின் தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 13 கூறுகளையும் கொண்டுள்ளது.
ICH ஆனது நம்பிக்கைகள், நாட்டுப் புறவியல், பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் மொழி போன்ற தொட்டுணர முடியாத அறிவுசார் சொத்துரிமைகளில் பங்கு வகிக்கின்றது.
தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியத்தை (ICH - Intangible Cultural Heritage) பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் ஒப்பந்தத்தின்படி, இந்தப் பட்டியலில் 5 விரிவான வகைப்பாடுகள் உள்ளன.
இயற்கையான மற்றும் பாரம்பரிய கைத்திறனுடன் கூடிய அறிவு மற்றும் நடைமுறைகள், சமூக நடைமுறைகள், சடங்குகள் & விழாக்கள், நிகழ்த்துக் கலைகள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தியாவின் ICH பட்டியல்
வேதம் ஓதும் பாரம்பரியம்
ராமாயணத்தின் பாரம்பரியச் செயல்திறன் - ராம்லீலா
குடியாட்டம் - சமஸ்கிருத நாடகக் கலை
ராமன் - கார்வால் இமயமலைப் பகுதியின் ஒரு மதம் சார்ந்த திருவிழா மற்றும் சடங்கு சார்ந்த கலை
முடியெட்டு - கேரளாவின் ஒரு சடங்குக் கலை மற்றும் நடன நாடகம்.
ராஜஸ்தானின் கல்பெலியா என்ற நாட்டுப்புறப் பாடல் மற்றும் நடனம்
சாகு நடனம்.
லடாக்கின் புத்த மதப் பாடல் பாடுதல் - ஜம்மு – காஷ்மீரில் லடாக்கின் இமயமலைப் பகுதிகளில் புனித புத்த நூல்களின் வரிகளை ஒப்பித்தல்.
மணிப்பூரின் சங்கீர்த்தனா - சடங்கு சார்ந்த பாடல், முரசு அறைதல் மற்றும் நடனம்.
பஞ்சாப்பின் ஜண்டியாலா தாத்ரேயா குருக்களிடையே காணப்படும் பாரம்பரியப் பித்தளை மற்றும் செம்புப் பாத்திரம் செய்யும் கலை.