TNPSC Thervupettagam

தொற்றாத நோய்களுக்கான தேசியத் திட்டம்

May 13 , 2023 819 days 390 0
  • சுகாதாரத் துறை அமைச்சகமானது புற்றுநோய், நீரிழிவு நோய், இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் (NPCDCS) ஆகியவற்றின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஒரு தேசியத் திட்டத்தில் புதிய நோய்களைச் சேர்த்துள்ளது.
  • பல புதிய நோய்கள் அல்லது நோய்க் குழுக்களின் சேர்க்கை மற்றும் புதிய சுகாதார முயற்சிகள் ஆனது, NPCDCS திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசினைத் தூண்டியுள்ளது.
  • எனவே இந்த 'NPCDCS' திட்டத்தினை, 'தொற்றாத நோய்களுக்கான தடு‌ப்பு மற்றும் அதன் கட்டுப்பாட்டுக்கான தேசியத் திட்டம் [NP-NCD] என மறுபெயரிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • NPCDCS திட்டமானது, தேசிய சுகாதாரத் திட்டத்தின் (NHM) கீழ் நாடு முழுவதும் செயல் படுத்தப் படுகிறது.
  • இந்தியாவில் 1990 ஆம் ஆண்டில் 37.9% ஆக இருந்த தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம் ஆனது 2016 ஆம் ஆண்டில் 61.8% ஆக அதிகரித்துள்ளது.
  • இருதய நோய்கள் (CVDs), புற்றுநோய்கள், நாள்பட்ட சுவாச நோய்கள் (CRDs) மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை நான்கு முக்கிய தொற்றாத நோய்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்