TNPSC Thervupettagam

தொற்றா நோய்கள் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த ஐ.நா. பிரகடனம்

December 20 , 2025 2 days 40 0
  • தொற்றா நோய்கள் (NCDs) மற்றும் மன ஆரோக்கியத்தை கூட்டாக உள்ளடக்கிய முதல் உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.
  • இந்தப் பிரகடனம் 2030 ஆம் ஆண்டிற்கான தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, NCD ஆனது வாய்வழிச் சுகாதாரம், நுரையீரல் சுகாதாரம் மற்றும் குழந்தைப் பருவப் புற்றுநோய் போன்றவற்றையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்துகிறது.
  • காற்று மாசுபாடு, சுத்தமான சமையல், ஈய மாசுக் கலப்பு, மிகவும் அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் டிஜிட்டல் சுகாதாரப் பாதிப்புகள் போன்ற புதிய ஆபத்துக் காரணிகள் இதில் அடங்கும்.
  • புகையிலை, ஆரோக்கியமற்ற உணவுகள், டிரான்ஸ் கொழுப்புகள் (மாறுபக்க கொழுப்பு) மற்றும் மின்னணு சிகரெட்டுகள் ஆகியவற்றினை அரசாங்கத்தின் முழுப் பங்களிப்புடன் வலுவாகக் கட்டுப்படுத்த இது அழைப்பு விடுக்கிறது.
  • NCD ஆனது ஆண்டுதோறும் சுமார் 18 மில்லியன் அளவிற்கு முன்கூட்டிய மரணங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும், மனநலப் பாதிப்புகள் என்பவை உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கின்றன என்பதையும் இப்பிரகடனம் எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்