தொற்று மற்றும் எப்பொழுதும் நிலவும் தொற்று குறித்த நுண்ணறிவிற்கான மையம்
September 8 , 2021 1353 days 624 0
உலக சுகாதார அமைப்பானது ஜெர்மனியின் பெர்லினில் ஒரு மையத்தைத் திறந்து உள்ளது.
இங்கு அடுத்த உலக சுகாதார நெருக்கடியிலிருந்து உலகைத் தயார்படுத்துவதில் உதவுவதற்காக தகவல்கள் பகிரப்படும்.
இந்த மையமானது தொற்று மற்றும் எப்பொழுதும் நிலவும் தொற்று குறித்த நுண்ணறிவிற்கான மையம் என அழைக்கப் படுகிறது.
பெருந்தொற்று, தொற்றுநோய் மற்றும் எப்பொழுதும் நிலவும் தொற்றிலிருந்து தரவுகளைக் கண்காணித்து, ஆய்ந்து, அவற்றைப் பயன்படுத்தி சிறப்பான தயார் நிலையோடு அவற்றைக் கணித்து மேலாண்மை செய்தல் எனும் ஒரு நோக்கத்தோடு இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.