அண்மையில், நீதித்துறை தனது தொலைதூரச் சட்ட திட்டத்தின் கீழ் பொதுச் சேவை மையங்கள் மூலம் 9 லட்சம் பயனாளிகளைக் கடந்த தன் சாதனையை நினைவு கூர்ந்துள்ளது.
வழக்காடுதலுக்கு முந்தைய நிலையில் இருக்கும் வழக்குகளுக்குத் தீர்வு காண 2017 ஆம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தினால் இது தொடங்கப்பட்டது.
நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் யார் வேண்டுமாயினும் சட்ட ஆலோசனை பெற இது உதவுகிறது.
சட்ட சேவைகள் ஆணையச் சட்டம், 1987 என்ற சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி இலவச சட்ட உதவிக்குத் தகுதியானவர்களுக்கு இந்த சேவை இலவசமாகும்.
பொதுச் சேவைகள் மையத் திட்டமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
இது இந்தியாவின் கிராமங்களுக்குப் பல்வேறு மின்னணுச் சேவைகளை வழங்கச் செய்வதற்கான அணுகல் மையங்களாகச் செயல்படுகிறது.