தொலைதூரத்தில் இருந்து நோயாளியைக் கண்காணிக்கும் சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பு
April 14 , 2020 1942 days 636 0
சமீபத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து தொலைதூரத்தில் இருந்து நோயாளியைக் கண்காணிக்கும் சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி உள்ளன.
இந்த அமைப்பானது கோவிட் – 19 தொற்றின் காரணமாக தனிமைப்படுத்துதலில் உள்ள நோயாளிகளைக் கையாளும் சுகாதார நலப் பணியாளர்களுக்கு இருக்கும் ஆபத்தைக் குறைப்பதற்காக நோயாளியின் வீடுகள் அல்லது மருத்துவமனைகளில் பொருத்தப்பட இருக்கின்றது.
இந்த அமைப்பானது தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் அதிகரித்து வரும் தேவையைக் குறைக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.