தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியன்று 2025 ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு (தொலைத்தொடர்பு இணைய வெளிப் பாதுகாப்பு) திருத்த விதிகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அறிவித்தது.
இந்த விதிகள் ஆனது தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளைச் சரிபார்க்கவும், தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனங்களை (TIUEs) DoT இணைய வெளிப் பாதுகாப்பு மேற்பார்வையின் கீழ் கொண்டு வரவும் ஒரு கைபேசி எண் சரி பார்ப்பு (MNV) தளத்தை நிறுவுகின்றன.
TIUE நிறுவனங்களில், அடையாளம் காணல், சரிபார்ப்பு அல்லது சேவை வழங்கலுக்காக கைபேசி எண்களைப் பயன்படுத்தும் வணிகங்களும் அடங்கும் என்பதோடுமேலும் அவை DoT தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் அதன் பயன்பாட்டு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், முன்னறிவிப்பு இல்லாமல் எண்களை இடைநிறுத்தவோ அல்லது தடுக்கவோ, காரணங்களை எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்ய, TIUE நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு DoT ஆணையிடலாம்.
திருடப்பட்ட அல்லது போலியாக்கப்பட்ட தொலைபேசிகளின் சாதனக் குறுக்கீடுகளை மற்றும் புழக்கத்தைத் தடுப்பதற்காக சர்வதேச கைபேசி உபகரண அடையாள (IMEI) விதிமுறைகளையும் இந்த விதிகள் வலுப்படுத்துகின்றன.