TNPSC Thervupettagam

தொலைத்தொடர்பு விதிகள் 2026

July 3 , 2026 5 days 82 0
  • தொலைத்தொடர்புச் சட்டம், 2023-இன் முக்கிய விதிகளைச் செயல்படுத்துவதற்காக தொலைத்தொடர்பு (முக்கிய தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரம்) விதிகள், 2026 நடைமுறைக்கு வந்துள்ளது.
  • இந்த விதிகள் இந்திய தந்திச் சட்டம், 1885-இன் கீழ் இருந்த உரிம முறைக்கு மாற்றாக, தொலைத்தொடர்பு சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அங்கீகாரக் கட்டமைப்பைக் கொண்டுவருகிறது. இனி அதிகபட்ச அங்கீகார காலம் 20 ஆண்டுகள் ஆகும்.
  • அணுகல் அலைக்கற்றை, பிரத்யேக பொது அல்லாத வலையமைப்புகள், கம்பிவடத் தரை இறங்கும் நிலையங்கள் மற்றும் முக்கிய தொலைத்தொடர்பு வலை அமைப்புகளுக்கான சட்டப்பூர்வ வரையறைகளை இவை அறிமுகப் படுத்துகின்றன.
  • மோசடிகளைக் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பெரிய தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை இந்த விதிகள் கட்டாயமாக்குவதோடு தரவு உள்ளூர்மயமாக்கலைச் செயல்படுத்துகின்றன. செயற்கைக்கோள் வலை அமைப்புகள் மற்றும் மிகச்சிறிய துளை கொண்ட முனையச் (VSAT) சேவைகளை அங்கீகார அமைப்பின் கீழ் கொண்டு வருகின்றன.
  • சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) கணக்கீடுகளிலிருந்து தொலைத்தொடர்பு அல்லாத வருமானத்தையும் இவை விலக்குவதுடன் டிஜிட்டல் செயலாக்கத்திற்காக தொலைத்தொடர்பு இ-சேவை வலைதளத்தினையும் அறிமுகப் படுத்துகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்