தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கிடையேயான பயன்பாட்டுக் கட்டணம்
October 11 , 2019 2126 days 802 0
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களிடம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கிடையேயான பயன்பாட்டுக் கட்டணத்தை (Interconnect Usage Charge - IUC) வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தக் கட்டணமானது நிமிடத்திற்கு 6 பைசா என்ற விகிதத்தில் இருக்கும்.
IUC என்பது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் உபகரணங்கள், அமைப்புகள் மற்றும் சேவைகளை பிற தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைக்கும் ஒரு ஏற்பாட்டைக் குறிக்கின்றது.
IUC கட்டணங்கள்
தற்போது இந்தியாவில் கம்பியற்ற முறையில் தொலைத் தொடர்புகளை ஏற்படுத்தும் சாதனங்களுக்கு மட்டுமே IUC கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (TRAI - Telecom Regulatory Authority of India (TRAI) IUC கட்டண விகிதங்களை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் IUC கட்டணத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர TRAI விரும்புகின்றது.
அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் VoLTEக்கு மாறும் என்று கருதப்பட்டதால் TRAI ஆனது IUCஐ முடிவுக்குக் கொண்டு வருகின்றது.
ஜியோ முற்றிலும் ஒரு VoLTE வலையமைப்பு (network) ஆகும். ஆனால் வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்களது பழைமையான 2G மற்றும் 3G வலையமைப்புகளிலும் தொடர்ந்து சேவைகளை வழங்குகின்றன.