தொல்லியல் துறைக்கான மத்திய ஆலோசனை வாரியம் ஆனது ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க உள்ளதாக இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுலா & கலாச்சாரத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி தலைமையில் இந்தச் சந்திப்பானது நடைபெற உள்ளது.
நியமனம் செய்யப்பட்ட அரசு சாரா நிபுணர்கள் மற்றும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்த்து மூன்று வருடக் காலத்திற்கு செயல்படும் வகையில் இது மறுசீரமைக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சிகளுக்கான முன்மொழிவுகள் குறித்து இந்தியத் தொல்லியல் துறைக்குப் பரிந்துரைகளை வழங்க தொல்லியல் துறைக்கான மத்திய ஆலோசனைக் குழுவின் நிலைக்குழுச் சந்திப்பானது ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது.
இந்தியத் தொல்லியல் துறையானது 1861 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவரால் நிறுவப்பட்டது.
இவர் அதன் முதல் தலைமை இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.