TNPSC Thervupettagam

தொழிற்பழகுதல் குறித்த நிதி ஆயோக் அறிக்கை 2026

February 25 , 2026 2 hrs 0 min 30 0
  • "Revitalising Apprenticeship Ecosystem: Insights, Challenges, Recommendations and Best Practices" என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கை இந்தியாவின் தொழிற்பயிற்சி முறையின் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது மற்றும் அதை செயல்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்களை அடையாளம் காட்டுகிறது.
  • இது தெளிவான செயல் திட்டம், ஒதுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் அளவிடக்கூடிய செயல்திறன் குறிகாட்டிகளுடன் சுமார் 20 செயல்முறை சார்ந்தப் பரிந்துரைகளை வழங்குகிறது.
  • இந்தப் பரிந்துரைகள் கொள்கை மற்றும் முறையான சீர்திருத்தங்கள், கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை வலுப்படுத்தல், மாநில மற்றும் மாவட்ட அளவிலான தலையீடுகள், தொழில் ஈடுபாடு மற்றும் பயிற்சியாளர் ஆதரவு வழிமுறைகள் ஆகிய ஐந்து தூண்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இது ஒரு பொதுவான டிஜிட்டல் தளம், ஒரு பயிற்சி ஈடுபாட்டுக் குறியீடு, வலுவான மாவட்ட திறன் குழுக்கள் மற்றும் தொகுதி அடிப்படையிலான மாதிரிகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) அதிக பங்கேற்பை முன்மொழிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்