2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி முதல், ஊதியங்கள் (2019), தொழில்துறை உறவுகள் குறியீடு (2020), சமூகப் பாதுகாப்புக் குறியீடு (2020), மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச் சூழல்கள் குறியீடு (2020) ஆகிய இந்தியாவின் நான்கு தொழிலாளர் குறியீடுகள் தற்போதுள்ள 29 தொழிலாளர் சட்டங்களுக்கு மாற்றாக அமல்படுத்தப்பட உள்ளன.
இந்தக் குறியீடுகள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம், இணையவழியில் திரட்டப் படும் தொழிலாளர்கள், இணைய தளத் தொழிலாளர்கள், ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் முறையான வேலை வாய்ப்புக்கான கட்டாய நியமன உறுதிப்பாடுகளை உறுதி செய்கின்றன.
பெண்கள் இரவு நேர வேலை காலங்களிலும் அனைத்துத் தொழில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வேலை செய்யலாம் என்பதோடு இதில் பாலின ஊதியச் சமத்துவம் மற்றும் பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
முதலாளிகள் நாடு முழுவதும் இலவச வருடாந்திர சுகாதாரப் பரிசோதனைகள், சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை வழங்க வேண்டும்.
ஒற்றைப் பதிவு, உரிமம் மற்றும் வருமான வரித் தாக்கல் இணக்கத்தை எளிதாக்கச் செய்வதோடு, தேசியத் தரநிலைகள் தொழில்துறைப் பாதுகாப்பு மற்றும் தொழில் துறை நலனை மேம்படுத்துகின்றன.
இந்தக் குறியீடுகள் ஆனது இளையோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நுட்ப நிறுவனங்கள், தோட்டக்கலை, ஒலி-ஒளி, தகவல் தொழில்நுட்பம், கப்பல்துறை, ஏற்றுமதி, அபாயகரமான மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்களுக்குப் பாதுகாப்புகளை விரிவுபடுத்தி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் கண்ணியத்தை அதிகரிக்கின்றன.