தொழிலாளர் அமைச்சகமானது, தேசியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை வரைவை (ஷ்ரம் சக்தி நிதி 2025) வெளியிட்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவான, எளிதில் மாற்றக்கூடிய சமூகப் பாதுகாப்புக் கணக்குகளை உருவாக்குவதே இதன் நோக்கம் ஆகும்.
இது EPFO, ESIC, PM-JAY (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா), e-SHRAM மற்றும் மாநில நல வாரியங்களை ஒருங்கிணைக்க முன்மொழிகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் பெண்களின் தொழிலாளர் வளப் பங்கேற்பை 35 சதவீதமாக உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கொள்கையானது, MSME நிறுவனங்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட வருமானம் மற்றும் சுயச் சான்றளிப்புடன் கூடிய ஒற்றைச் சாளர டிஜிட்டல் இணக்கத் தளத்தை அறிமுகப்படுத்துகிறது.
இது செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தொழிலாளர் நிர்வாகம், ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் பாலினம் அடிப்படையிலான பாதுகாப்புத் தரநிலைகளில் கவனம் செலுத்துகிறது.
தொடக்கம், கண்காணிப்பு மற்றும் கொள்கை புதுப்பித்தல் ஆகியவை உள்ளிட்ட இந்தக் கொள்கை ஆனது 2025 முதல் 2030 ஆம் ஆண்டிற்கு அப்பாலான காலக் கட்டம் வரையில் மூன்று கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முகப்புப் பக்கங்கள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை மதிப்பீட்டுக் குறியீடு (LPEI) மற்றும் பாராளுமன்றத்திற்கான வருடாந்திர அறிக்கைகள் மூலம் இதன் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.