சமூகப் பாதுகாப்புத் தொகுப்பு, 2020-இன் கீழ், 1952 ஆம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்குப் பதிலாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 2026-ஐ மத்திய அரசு அறிவித்தது.
கட்டாய EPF பங்களிப்பானது ஊழியர் மற்றும் முதலாளி ஆகிய இருவராலும் ஊதியத்தில் தலா 12% ஆகத் தொடர்கின்ற அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 10% விகிதம் தொடர்கிறது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காக மின்னணுத் தாக்கல்கள், இணையவழி உரிமைகோரல்கள், மின்னணு சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் அனைவருக்குமான கணக்கு எண் (UAN) இணைப்பு ஆகியவற்றை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
மருத்துவச் சிகிச்சை, கல்வி, திருமணம், வீட்டு வசதி மற்றும் பிற குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக, பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பகுதியாக தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிகளையும் இது புதுப்பிக்கிறது.
டிஜிட்டல் இணக்கம், கணக்கு பெயர்வுத் திறன் மற்றும் சமூகப் பாதுகாப்புத் தொகுப்பு, 2020 உடனான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.