மத்திய அமைச்சரவையானது தேசிய சுரங்கப் பணியாளர்கள் ஆரோக்கிய நிறுவனத்தை (National Institute of Miners' Health - NIMH) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (ICMR/Indian Council of Medical Research) – தேசிய தொழில்சார் ஆரோக்கிய நிறுவனத்துடன் இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
NIHM ஆனது தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் துப்புரவுத் துறையில் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்கின்றது. இது சுரங்கம் மற்றும் கனிமம் சார்ந்த தொழிற்சாலைகளுக்குத் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கின்றது.
பதிவு செய்யப்பட்ட அலுவலகம் : கோலார் தங்க வயல், கர்நாடகா
இது 1990 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் அமைக்கப்பட்டது.