புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆனது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக் கட்டத்தை உள்ளடக்கிய வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு (ASI) 2023–24 அறிக்கையினை வெளியிட்டது.
நடப்பாண்டு விலைகளில் மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) 2022–23 ஆம் ஆண்டினை விட 2023–24 ஆம் ஆண்டில் 11.89 சதவீதம் அதிகரித்து, 24,58,33,605 லட்சம் ரூபாயை எட்டியது.
2023–24 ஆம் ஆண்டில் தொழில்துறை உற்பத்தி 5.80 சதவீதம் உயர்ந்து, மொத்த உற்பத்தி மதிப்பு 1,53,27,16,609 லட்சம் ரூபாயாக இருந்தது.
இந்தத் துறையில் மொத்த வேலைவாய்ப்பு 5.92 சதவீதம் அதிகரித்து, 2023–24 ஆம் ஆண்டில் 1,95,89,131 ஆக உயர்ந்துள்ளது.
2014–15 மற்றும் 2023–24 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தத் துறை 57 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளைச் சேர்த்தது.
ஒட்டு மொத்த மொத்த மதிப்பு கூட்டலில் மூல உலோகங்கள் சுமார் 11.56 சதவீதப் பங்களிப்பை வழங்கின என்பதோடு இது அனைத்துத் தொழில் குழுக்களிலும் மிக உயர்ந்ததாகும்.
மொத்த வேலைவாய்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியவை முன்னணி ஐந்து மாநிலங்கள் ஆக உள்ளன.
மொத்த மதிப்பு கூட்டலில் மகாராஷ்டிரா 15.95 சதவீதப் பங்களிப்போடு முன்னணியில் இருந்தது, அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை இடம் பெற்றன.
தேசிய மொத்த மதிப்பில் குஜராத் 19.53 சதவீதம் என்ற நிலையான மூலதனத்தோடு அதிக பட்ச பங்கைக் கொண்டிருந்தது.
2023–24 ஆம் ஆண்டு ASI கணக்கெடுப்பில் பதிவான மொத்தத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2,60,061 ஆகும்.
2023–24 ஆம் ஆண்டில் மொத்தத் தொழிலாளர்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு 0.42 ஆக அதிகரித்தது.
2.20 ஆக இருந்த நிலையான மூலதனம் மற்றும் நிகர மதிப்பு கூட்டப்பட்ட விகிதம் மூலதனச் செயல்திறனைக் குறிக்கிறது.
தொழிற்சாலைகளின் எண்ணிக்கை ரீதியாக தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் முன்னணியில் இருந்தன.
நிலையான மூலதனத்தில் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்கள் முன்னணியில் இருந்தன.
மொத்த உற்பத்தியில் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் முன்னணியில் இருந்தன.
மொத்த மதிப்பு கூட்டலின் அடிப்படையில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் முன்னணியில் இருந்தன.
மொத்த உற்பத்தியில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் முன்னணியில் இருந்தன.
முதல் பத்து தொழில்துறைகள், மொத்த உற்பத்தி சார்ந்த மொத்த மதிப்புக் கூட்டலில் 71 சதவீத பங்கினை அளித்தன.
உற்பத்தி சார்ந்த மொத்த மதிப்பு கூட்டலில் ஐந்து முன்னணி மாநிலங்கள் 54 சதவீதப் பங்கினையும், மொத்த வேலைவாய்ப்பில் 55 சதவீதப் பங்கினையும் கொண்டிருந்தன.