தொழில்துறை சார்ந்த ஆழ்ந்த கார்பன் நீக்க முன்னெடுப்பு
June 8 , 2021 1516 days 760 0
இந்திய அரசானது ஐக்கிய ராஜ்ஜிய அரசுடன் இணைந்து தொழில்துறை சார்ந்த ஆழ்ந்த கார்பன் நீக்க முன்னெடுப்பினை (Industrial Deep Decarbonization Initiative) தொடங்கியுள்ளது.
இது தூய ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் 12வது முதன்மை ஆற்றல் அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டது ஆகும்.
குறைவான கார்பன் சார்ந்த தொழில்துறை பொருட்களுக்கான தேவையை ஊக்குவிப்பதற்காக செயல்படும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பே தொழில்துறை சார்ந்த ஆழ்ந்த கார்பன் நீக்க முன்னெடுப்பு ஆகும்.
இது இந்தியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தினால் இணைந்து நடத்தப்படுகின்றது.
தற்போதைய உறுப்பினர்களாக ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளையும் இது உள்ளடக்கியுள்ளது.