மத்தியக் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான பிரகலாத் சிங் படேல் (தனிப் பொறுப்பு) கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் (Centre for Cultural Resources and Training - CCRT) “டிஜிட்டல் பாரத் டிஜிட்டல் சமஸ்கிருதி” என்ற மின்னணு முறையிலான தளத்தையும் CCRTயின் யூடியூப் அலைவரிசையையும் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இது நாடு முழுவதும் உள்ள வகுப்பறைகளில் டிஜிட்டல் ஊடாடும் முறையின் மூலம் கலாச்சாரக் கல்வியைப் பரப்புவதற்கு உதவிட இருக்கின்றது.
இந்த முன்முயற்சிக்காக, அனைத்து CCRT பிராந்திய மையங்களையும், அதாவது குவஹாத்தி, உதய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய மையங்களைத் தடையின்றி இணைப்பதற்காக CCRT ஆனது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ரூட்ஸ் 2 ரூட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
CCRT ஆனது இந்திய அரசின் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இது கலாச்சாரக் கல்வியை ஆதரிப்பதற்காக 1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.