தொழில்நுட்பப் பரிமாற்ற நிகழ்ச்சி – பாதுகாப்புத் துறைக் கண்காட்சி
February 12 , 2020 1971 days 625 0
தொழில்நுட்பப் பரிமாற்ற நிகழ்ச்சியானது லக்னோவில் நடைபெற்று வரும் 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறைக் கண்காட்சியின் போது நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குப் “பந்தன்” என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்த அமைப்பானது 15 அனுமதி உரிமைகளை 17 தொழில் துறைகளுக்கு மாற்றியுள்ளது.
இந்த மாற்றப்பட்ட உரிமங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் தொடர்புடையதாகும்.
இந்தத் தொழில்நுட்பங்களின் பரிமாற்றமானது உத்தரப் பிரதேச பாதுகாப்புத் துறைப் பெருவழிப் பாதையின் வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கமளிக்கும்.
லக்னோவில் நடைபெற்று வரும் 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறைக் கண்காட்சியின் 11வது பதிப்பானது இதுவரை நடைபெற்ற அனைத்து பாதுகாப்புத் துறைக் கண்காட்சிகளிலும் மிகப் பெரியதாகும்.