தொழில்நுட்பம் மீதான G20 உலகளாவிய பொலிவுறு நகரங்களுக்கான கூட்டணி
October 14 , 2019 2123 days 657 0
தொழில்நுட்பம் மீதான G20 உலகளாவிய பொலிவுறு நகரங்களுக்கான கூட்டணியின் ஒரு உறுப்பினராக இந்தியா சேர்ந்திருக்கின்றது.
இது பொலிவுறு நகரங்களுக்கான தொழில்நுட்பங்களின் பொறுப்பான மற்றும் சரியான பயன்பாட்டை மேம்படுத்துவதில் பணியாற்றுகின்றது.
உலகப் பொருளாதார மன்றம், பொது தனியார் பங்களிப்பிற்கான சர்வதேச அமைப்பு ஆகியன இந்த கூட்டணிக்கான செயலகமாகப் பணியாற்றுகின்றது.
இது பற்றி
இது (இந்தியா சேர்ந்ததை அடுத்து) 16 நாடுகளைக் கொண்ட உலகின் முன்னணி நகரப் பிணைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாக அமைப்புகள் ஆகியவற்றின் ஒரு கூட்டணி ஆகும்.
இது 2019ம் ஆண்டில் ஜூன் மாதம் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற G20 மாநாட்டுடன் இணைந்து ஏற்படுத்தப் பட்டது.