May 4 , 2019
2425 days
893
- “தொழில்நுட்ப துணிகள்” மீதான தேசிய கருத்தரங்கானது கோயம்புத்தூரில் நடைபெற்றது.
- இந்தக் கருத்தரங்கில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகமானது தொழில்நுட்ப துணிகள் மீதான இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.
- இது தொழில்நுட்பத் துணிகளின் திறனை வெளிக் கொண்டு வருவதையும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பனவற்றையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
- தொழில்நுட்பத் துணி என்பது அழகியல் சாராத பயன்பாடுகளுக்காகவும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுக்காகவும் உருவாக்கப்பட்ட ஆடை வகையாகும்.
- பின்வருபவை தொழில்நுட்பத் துணிகளில் அடங்கும்
வகை
|
பயன்பாடு
|
| மருத்துவ ஆடைகள் |
உட்பொருத்திகள் |
| வேளாண் ஆடைகள் |
பயிர்ப் பாதுகாப்பிற்கான ஆடைகள் |
| புவியியல் ஆடைகள் |
நீரினைத் தேக்கி வைக்கும் கரையினை வலுவூட்டுதல் |
| பாதுகாப்பு ஆடைகள் |
தீயிலிருந்துப் பாதுகாக்கும் ஆடைகள், தோட்டாக்களிலிருந்துப் பாதுகாக்கும் ஆடைகள், விண்வெளியில் பயன்படுத்தும் ஆடைகள் |
| வாகனத் துறைக்கான ஆடைகள் |
விரிப்பான்கள், உட்பூச்சுப் பொருட்கள் |
Post Views:
893